என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி மரணம்"
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த கஞ்சனூர் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது58) பனை மரம் ஏறும் தொழிலாளி. இன்று காலை 6 மணிக்கு பனை மரத்தில் ஏறினார்.
மரத்தின் உச்சியில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மரத்திலேயே பிணமாக தொங்கி விட்டார்.
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மரத்தில் ஏறி பிணத்தை மீட்டு கொண்டு வந்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கொல்லப்பள்ளி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி நள்ளிரவு திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 48) என்பவரை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இதுபற்றி வனத்துறையினர், அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, உறவினர்கள் ஸ்ரீகாளஹஸ்திக்கு வருவதற்கு முன்பே காமராஜின் பிணத்தை ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து, பிணத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் பிணத்தைப் பெற்றுக்கொள்ளாமல், ஆந்திர ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலியான காமராஜின் பிணத்தை மறு பிரேத பரிசோதனைச் செய்ய வேண்டும், வனத்துறையினர் காமராஜை பிடித்து வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர், அவரின் சாவில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளதாக கூறி, நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, காமராஜின் பிணத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
மேலும் திருப்பதி தாசில்தார் தலைமையில் குழு அமைத்து, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் ஆகியோரை விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நேற்று நீதி விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என காமராஜின் குடும்பத்தை சேர்ந்த ராமராஜ் உள்பட 7 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.
நேற்று விசாரணைக்காக வந்த ராமராஜ், மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிசெந்தில்ராஜ் உள்பட 7 பேர் திருப்பதி தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து காலை முதல், மதியம் வரை காத்திருந்தனர்.
ஆனால் தாசில்தார் வராததால், அவரின் உதவியாளர்கள் தற்போது இதுகுறித்து விசாரிக்க முடியாது, தாசில்தார் வேறு பணியில் இருப்பதால் இன்னொரு முறை வாருங்கள், அதற்கான தேதியை தாசில்தாரிடம் பெற்று, உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ராமராஜ் உள்பட 7 பேரும் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பிச் சென்றனர். #tamilnews
ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 31). இவர் கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று சுந்தரராஜபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். சாரத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்த அவர் மதியம் சாப்பிடுவதற்காக கீழே இறங்கினார்.
அப்போது ஆபிரகாம் எதிர்பாராத விதமாக கால் இடறி சாரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் அபிரகாம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆபிரகாம் மனைவி புஷ்பவள்ளி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பவானி தொழிலாளர் வீதியை சேர்ந்தவர் பாபு என்கிற சீனிவாசன் (வயது 45).
இவரது மனைவி பெயர் தமிழரசி. சசிகுமார் என்ற மகனும் சுபரஞ்சனி என்ற ஒரு மகளும் உள்ளனர். சீனிவாசன் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரிடம் சரியாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டுக்கு வந்த சீனிவாசன் தனது அறையில் போய் படுத்து தூங்கிவிட்டார். அப்போது அவர் குடித்திருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று 9-ந்தேதி அவரது மகள் சுபரஞ்சனி தந்தை அறைக்கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு சீனிவாசன் படுத்திருந்த நிலையிலேயே பிணமாக கிடந்தார்.
இது குறித்து பவானி போலீசுககு புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லசும் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
7-ந்தேதி இறந்து கிடந்த சீனிவாசன் 2 நாட்களுக்குப் பிறகே அவரது உடல் மீட்கப்பட்டது.
பவானி போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
முத்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அடுத்த விளாம்பட்டியை சேர்ந்தவர் வீரகார்த்திக் (வயது31). இவரது மனைவி பெயர் கலா. வீரகார்த்திக் முத்தூர் அருகே உள்ள வீரசோழ புரத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் வேலைக்கு போய் விட்டு வருவதாகவும் மறுநாள் காலை தாமதமாக வருவேன்..என்று மனைவியிடம் சொல்லி கொண்டு வீரகார்த்திக் வேலைக்கு சென்றார்.
ஆனால் மறுநாள் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கொடுமுடி ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை அருகே வீரகார்த்திக் மயங்கி கிடந்ததை அவருடன் வேலை பார்க்கும் மோகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் வீரகார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரகார்த்திக் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாராபுரத்தில் பவர் பிளாக்கல் ஓட்டும் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் கன்னங்குறிச்சி மன்னார் பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அங்கிருந்து தங்கவேல் உட்பட 4 பேர் தீவட்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு பவர் பிளாக் செங்கலை கொண்டு வந்தனர். அப்போது அவர் எதிரே உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சேலம்-தர்மபுரி நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயனறார். அப்போது அந்த தனியார் பள்ளி வேன் தங்கவேல் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தீவெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). கூலிதொழிலாளி.
பாலமுருகன் தினமும் காலையில் வீராணம் ஏரியில் குளித்து விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை பாலமுருகன் வீராணம் ஏரியில் குளிப்பதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்றார். பின்னர் வீராணம் ஏரியில் குளித்தார். அப்போது திடீரென பாலமுருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கரைக்கு திரும்ப முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
அவரின் உடல் ஏரியில் மிதந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஏரியில் பிணமாக மிதந்த பாலமுருகனின் உடலை போலீசார் வெளியே மீட்டனர். அவரது உடலை பார்த்து மனைவி ரமா மற்றும் மகன் சந்தோஷ், மகள் சந்தியா கதறி அழுதனர். இது பார்ப்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து பாலமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள செக்கானூரணியை சேர்ந்தவர் நல்லுச்சாமி. இவரது மகன் நாகராஜ் (வயது38). இவர் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தில் குடிமராமத்து பணிக்கு சென்று இருந்தார்.
நேற்று அங்கு கண்மாயை ஆழப்படுத்தும் பணி நடந்தது. அப்போது டிப்பர் லாரி மூலம் மணல் கொண்டு செல்லப்பட்டது. மணலை தானியங்கி மூலம் கொட்டிய போது மின்வயர் லாரி மீது உரசியது. அப்போது லாரியை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நாகராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையம் ரங்கநாயகி நகரை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 68). தொழிலாளி. இவர் இன்று காலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
ஜோதிபுரம் அருகே வந்தபோது எதிரே ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரத்தினசாமி தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தினசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கார் ஓட்டி வந்த திருமலைநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஆசீர் வடிவேல் முருகன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த கொடநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது49) கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை சென்னவரம் என்ற பகுதியில் வேலைக்கு சென்று விட்டு மேல்மருவத்தூர் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கோட்டை மூலை என்ற இடத்தில் அந்த வழியாக பால் ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதியது.
இதில் சேகர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் மேட்டூர் உள்பட காவிரி பாய்ந்தோடும் பல்வேறு பகுதியில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பெண்கள் விரதம் இருந்து ஆற்றை வழிபட்டு, வாழை மட்டையில் விளக்கேற்றி நீரில் விட்டனர். புதுமணப் பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றி புதுத் தாலி கயிற்றை அணிந்தனர். அத்துடன் தங்களது திருமண பூமாலையை ஆற்றில் விட்டு காவிரி தாயை வணங்கினார்கள்.
எடப்பாடி அருகே உள்ள வெள்ளரி வெள்ளி வேட்டுவப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் (வயது 43) இன்று அதிகாலையில் காவிரி ஆற்றில் புனித நீராட தனது நண்பர்களுடன் கோணேரிப்பட்டி அருகே உள்ள கோட்டமேடு படித் துறைக்கு வந்தார்.
அப்போது சக்திவேல் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். ஆற்று நீரின் இழுப்பு வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் உடனடியாக திரும்பி கரைக்கு வர முடியவில்லை. நீரில் தத்தளித்தார். சிறிது நேரத்திலேயே தண்ணீரில் மூழ்கி சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.
நண்பர்களின் கண் முன்பே இந்த சம்பவம் நேர்ந்தது. அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பலியான சக்திவேலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு ஒரு தம்பி உள்ளார். அவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆடிப்பெருக்கை முன்னிட்டு புனித நீராட வந்தவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்